தீவகத்துக்கு சரவணபவனால் உலர் உணவுகள்!

தீவகம் பகுதியில் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஊடரங்கு நடைமுறையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலருணவு பொருட்கள் , கிருமிநாசினிகள் போன்றவற்றினை வழங்கவேண்டுமென்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , உதயன் & சுடர் ஒளி பத்திரிகைகளின் நிறுவுனருமாகிய ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களிடம் தமிழரசுக் கட்சி தீவகக் கிளையினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

உடனடியாக அந்தக் கோரிக்கையைச் சாதகமாகப் பரிசீலித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீவகக் கிளை உப தலைவர் கருணாகரன் குணாளன் ஊடாக  மூன்று மணியாத்திலங்களே திறப்பதற்கு அனுமதிக்கப்பட்ட ஓர் பலசரக்கு விற்பனை நிலையததில் ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம் ( 110000 / = ) பெறுமதியான உலருணவு மற்றும் கிருமிநாசினிகளை( 100 பொதிகள் ) தனது சொந்த நிதியில் கொள்வனவு செய்து  வழங்கியுள்ளார்.

ஆனாலும் நேரப்பற்றாக்குறையினால் அவற்றில் 50 பொதிகளையே நேற்றையதினம் எம்மால் வழங்க முடிந்தது . மிகுதி 50 பொதிகளும் எதிர்வரும் தினங்களில் மக்களிடம் வழங்கப்படும் . அதேபோன்று வடமராட்சி பகுதிகளில் வழங்குவதற்காக ரூபாய் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான உலருணவு மற்றும் கிருமிநாசினிகளையும் கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மடூத்தீன் பெனடிக்ற் ( சின்னமணி ) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரிடம் 31 பொதிகளும் , ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் ஜெயக்குமார் ( செல்வம் ) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 19 பொதிகளும் நேரடியாக அவர்களிடமே எம்மால் கையளிக்கப்பட்டன.

குறிப்பாக இவ்விடயத்தில் மக்கள் கும்பலாக ஒன்றுகூடுவதனை நாம் தவிர்த்துக்கொண்டோம் . பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனித்தனியாக வழங்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம் . அவர்களும் அதனை செவ்வனே செய்திருந்தனர் . – என்று கருணாகரன் குணாளன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.