சுமந்திரனின் நிதியில் வடமராட்சி மக்களுக்கு உதவி!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் அவர்களின் நிதியில் தினக்கூலி செய்யும் குடும்பங்களிற்கு இரவு உணவிற்கான ஒரு தொகுதி பாணும்,ஒரு தொகுதி உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது

தற்போது நாட்டில் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளாந்த கூலிவேலைகளுக்கு சென்று வாழ்வாதரத்தை முன்னெடுக்கும்
குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


ஊரடங்கு கடந்த செவ்வாய்க்கிழமை தளர்த்தப்பட்டபோதும் நாளாந்த கூலிவேலைக்கு செல்வோர்  தொழில் நடவடிக்கையில் ஈடுபட அவகாசம் கிடைக்கவில்லை. இதனால் அவர்களின் குடும்பங்கள் நெருக்கடியை சந்தித்துள்ளன.


இவற்றை கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் வல்வெட்டித்துறை மாணாங்கானை பிரதேசத்தில்பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் உடுப்பிட்டி கிளையினர்க்கு அப்பகுதி இளைஞர்களால் தகவல் வழங்கப்பட்டது.


இதனையடுத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் நிதி உதவியில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.


வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுப்பொதிகளை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.