வதந்தியை பரப்பிய தனியார் பல்கலைக்கழக அதிகாரிக்கு விளக்கமறியல்!
கொரோனா நோய் தொற்றால் 10 பேர் உயிரிழந்துள்ளனரென, உண்மைக்குப்புறம்பான தகவல்களை முகப்புத்தகத்தில் வெளியிட்ட தனியார் பல்கலைக்கழகமொன்றின் நிர்வாக அதிகாரியொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலையின் அதிகாரியொருவரே குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை