திருநெல்வேலி சந்தைக்குச் செல்லும் பொது மக்களுக்கு அவசர அறிவித்தல்
நல்லூர் பிரதேச எல்லைக்கு உட்பட்ட பிரதான பொதுச் சந்தையான திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம் செய்யப்பட உள்ளது
இதன்படி பல குழுக்களாக வெவ்வேறு இடங்களில் இயங்கவைக்க நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்ப்பணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது திருநெல்வேலி சந்தையில் மக்கள் நெருக்கடியை தவிர்க்கும் முகமாகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே இதை கூறினார்.
மேலும், சந்தைக்கு வரும் வீதிகளில் பல இடங்களில் சந்தை வியாபாரத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம். மக்கள் சந்தைக்கு வரும் வீதிகளில் உள்ள வியாபாரிகளிடம் மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய முடியும்.
மேலும், விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை தங்களின் இடங்களிலோ அவர்களது கிராமங்களிலோ விற்பனை செய்ய முடியும். பொதுமக்கள் திருநெல்வேலி சந்தைக்கு வரும் பாதைகளில் உள்ள மரக்கறி வியாபார நிலையங்களில் கொள்வனவுசெய்து எமக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றார்.
கருத்துக்களேதுமில்லை