ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் நுட்பமான முறையில் ஒருவருக்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளியில் எமது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் பொருட்கள் கொள்வனவில்…

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களையும் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களையும் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இரண்டாம் முறையாக இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதில் இன்றும் அதிக ஆர்வம் காட்டி வருவதை காணமுடிகின்றது.

இதற்கமைவாக அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மக்கள் சத்தோச, ஏனைய வர்த்தக நிலையங்கள், வங்கிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வெள்ளம் இன்று அலை மோதியதை அவதானிக்க முடிந்தது எனினும் மக்கள் கொரோனா தொற்றில் இருந்து விடுபட நுட்பமான முறையில் ஒருவருக்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளியில் நின்று பொருட்களை வாங்குவதனையும் மற்றும் சேவையினை பெறுவதனையும் காணக்கூடியதாக இருந்தது.

மக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயற்படுவது பாராட்டத்தக்கதாகவும் மேலும் எவ்வாறு விழிப்புணர்வுடன் தொடர்ந்து செயற்படுவது வரவேற்கத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.