வவுனியாவில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவால் உலர் உணவுப் பொருட்கள் வவுனியாவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்.  இதனால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்துவரும் மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவால் நேற்று (புதன்கிழமை) வவுனியா, செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 400இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.