‘கோவிட்-19 எனும் கொடிய நோயில் இருந்து எம்மை பாதுகாப்போம்’- அம்பாறையில் விழிப்புணர்வு

இலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் முனமாக இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பினால் விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது.

அரச சட்டவாதி சட்ட முதுமாணி எம்.ஏ.எம்.லாபிரின் தலைமையில் ‘கோவிட்-19 எனும் கொடிய நோயில் இருந்து எம்மை பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் சம்மாந்துறையின் பிரதான வீதி மற்றும் உள்ளக வீதிகளில் இன்று (வியாழக்கிழமை) இந்த விழிப்புணர்வு இடம்பெற்றது.

சம்மாந்துறை பொலிஸார், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் இவ்விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பொதுமக்களுக்கு எவ்வாறு கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பான அறிவுறுத்தப்பட்டதுடன் வீதிகளில் முகக்கவசம் இன்றிப் பயணித்தவர்கள் இடைநிறுத்தப்பட்டு இலவசமாக முகக்கவசம் அணிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.