இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தாவடி மக்களுக்கு அத்தியவசியப் பொருட்கள் வழங்கிவைப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தாக்கத்திற்கு உள்ளானவர் வசித்த தாவடி கிராம மக்களுக்கு அத்தியவசியப் பொருட்கள் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சதொச வர்த்த நிலையம், சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து கிராம மக்களுக்கான அத்தியவசியப் பொருட்களை வழங்கும் நடவடிக்கைகளில் இன்று (வியாழக்கிழமை) ஈடுபட்டன.

யாழ். மாவட்டத்தில் இதுவரை ஒரு கொரோனா நோயாளி இனம் காணப்பட்டுள்ள நிலையில் அவரது கிராமமான தாவடி கிராமம் பாதுகாப்புத் தரப்பினரின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் சுமார் 300 குடும்பங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு அத்தியவசியப் பொருட்களான கோதுமை மா, அரிசி, பருப்பு, ரின் மீன் போன்ற பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்