மார்ச் 30 – ஏப்ரல் 03 வரை வீட்டிலிருந்து வேலைசெய்யும் காலமாகப் பிரகடனம்

இளநகையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்கு அரசு முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்தை பலப்படுத்துவதற்கு மார்ச் 30ஆம் திகதி முதல் ஏப்ரல் 03ஆம் திகதி வரை வீடுகளில் இருந்து வேலைசெய்யும் காலமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவையாக குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தவிர்ந்த அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இது ஏற்புடையதாகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதி அரச விடுமுறை நாட்களாகக் கருதப்படமாட்டாது. மக்கள் சேவையை தொடர்ச்சியாக பேணுவது அரசின் பொறுப்பாகும். எனினும், மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து சுயநோய்த் தடுப்புக் காப்புக்கு இடமளிப்பது இதன் நோக்கமாகும்.

ஏற்கனவே மார்ச் 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வீட்டிலிருந்து வேலைசெய்யும் வாரமாக அரசால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அந்த நடைமுறையை குறித்த காலப்பகுதியிலும் தொடர்ந்தும் முன்னெடுக்க அரசு தீர்மானித்துள்ளது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்