பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4 ஆயிரத்து 18 பேர் கைது
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4 ஆயிரத்து 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் உட்பட ஆயிரத்து 33 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை