காரைதீவு மக்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் உதவி!

கொரொனா வைரஸ் பரவலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள  அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டு மக்கள் பலவாறான இன்னல்களுக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் பல்வேறு அமைப்புக்கள் பிந்தங்கிய எம் மக்களுக்கு அன்றாட தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் பல்விதமான உதவிகளையும் புரிந்துவருகின்றனர்.

அந்த வகையில் கிழக்குமாகாணம் காரைதீவு கிராமத்திற்கு  காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகத்துடன் இணைந்து ஆஸ்ரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியம்
மற்றும் காரைதீவு மக்கள் ஒன்றியம் ஐக்கிய இராச்சியம்  அனுசரனையுடனும் அத்துடன் ஏனைய புலம்பெயர் காரைதீவு மக்கள், உள்ளூர் நலன் விரும்பிகளின் பங்களிப்புடன் எமது கிராமத்தின்
வறுமைக்கோட்டுக்கு கீழ் வழும் மக்கள், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய நாளந்தம் கூலித்தொழில் செய்யும் மக்கள் மற்றும் சமூர்த்தி கொடுப்பனவு பெறுவோர் போன்றோரை காரைதீவு பிரதேச செயலகத்தினூடாக பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சுமார் 600 இற்கும்
மேற்பட்ட ரூபா.1000.00 மற்றும் ரூபா.500 உணவுப்பொதி வவுச்சர்கள்  அமைப்பினரால் பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்துஇ அவையாவும் கிராம சேவகர்களினூடாக மக்களுக்கு பகிந்தளிக்கப்பட்டு அந்த அந்த பிரதேசங்களில்  உள்ள கடைகளில் மக்கள் வவுச்சர்களை ஒப்படைத்து தமக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ள முனுPளு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த மனிதநேய செயற்பாடனது பலரினதும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடுஇ மக்களும் இந்த அமைப்பின் செயற்பாட்டிற்கு தமது நன்றிகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.