வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் நகரத்தை நோக்கி வந்த மக்கள்!

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிமுதல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், வவுனியா நகருக்கு கணிசமாக மக்கள் வந்துள்ளனர்.

எனினம், வவுனியா மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலிற்கு அமைய கிராமங்களில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கான பொருட்கள் நேற்றைய தினம் விநியோகிக்கப்பட்டதுடன், நகரை அண்டிய பகுதிகளில் மரக்கறி வியாபாரங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக வவுனியா நகரை நோக்கிய மக்களின்  வருகை குறைவாக இருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது. இதேவேளை சுகாதார திணைக்களத்தினால் கொரோனா தொற்று நோய் தொடர்பாக துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டதோடு விழிப்புணர்வுச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேலும் எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையாக நின்றதுடன், பலபொருள் விற்பனை நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்ற நிலையில் அதிகளவான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சுகாதார அறிவுறுத்தல் மற்றும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்