மிருசுவில் படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பு என்ற செய்தி எங்களை வருத்தமடைய வைத்துள்ளது – யு.என்.ஆர்.சி.

யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை பெற்ற குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பளித்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட செய்தி தங்களை மிகவும் வருத்தத்திற்குள்ளாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 வயது குழந்தை இரு இளைஞர்கள் உட்பட 8 பேர் படுகொலை செய்த மரண தண்டனை கைதியான இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவை பொதுமன்னிப்பளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று விடுவித்திருந்தார்.

ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பு மன்னிப்பு என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவமரியாதை மற்றும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் பிற அர்த்தமுள்ள பொறுப்புணர்வை வழங்குவதற்கான சர்வதேச மனித உரிமைகள் கடமைகளை இலங்கை நிறைவேற்றத் தவறியதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் உள்நாட்டு போரின்போது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவருக்கு மன்னிப்பு வழங்குவது, மனித உரிமை மீறலுக்கான தண்டனையை முடிவுக்குக் கொண்டுவருவதில் அந்த நாடு மேற்கொண்டுள்ள முன்னேற்றத்தை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.