கடந்த 24 மணித்தியாலங்களில் எவரும் அடையாளம் காணப்படவில்லை- சுகாதார அமைச்சு
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் எந்த ஒரு நபரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை தொடர்பில் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 237 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சுவிஸ் மற்றும் பிரான்ஸில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை