வட்சப் கணக்கு ஒன்றினை பயன்படுத்தி பாதுகாப்பு தரப்பிற்கு அச்சுறுத்தல்-நால்வர் கைது.

நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள்  மாணவர்கள் சட்டத்தை மதித்து நடக்குமாறும் அனுமதிக்கப்பட்ட விசேட அடையாள அட்டைகள் வைத்திருப்பவர்களைத் தவிர வேறு எவரும் வெளியில் செல்ல வேண்டாம் என  அம்பாறை பிராந்தியத்தில் உள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரிகள்   அறிவித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை சவளக்கடை மத்தியமுகாம் கல்முனை பொலிஸ் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பின்னர் சிலர் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதானோரில் இளைஞர்களும் மாணவர்களும் உள்ளடங்குவதுடன்  கூட்டம் கூட்டமாக மோட்டார் சைக்கிள்களில் பிரதான வீதிகளில் பாதுகாப்புப் படையினரை அச்சுறுத்தல் விடுக்கும் முகமாக நடமாடியுள்ளவர்களே கைதாகி உள்ளனர்.

அத்துடன்  ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது கல்முனை பொலிஸ் பரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை  மருதமுனை பகுதிகளிலும்  மற்றும் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதியிலேயே  ஊரடங்கு மீறல்கள் அதிகம் பதிவாகதாகவும் தெரிய வந்துள்ளது.

எனவே. பெற்றோர்கள்  உறவினர்கள் தமது கட்டுப்பாட்டிலுள்ள மாணவர்களைத் தமது வீடுகளிலேயே தங்க வைக்குமாறும் வெளியில் வீணாக சுற்றித் திரிய அனுமதிக்க வேண்டாம் எனவும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

விபரீதங்கள் ஏதாவது ஏற்பட்டால் மோட்டார் சைக்கிள் பாவித்தவர்கள்  அவற்றை வாங்கிக் கொடுத்தவர்கள் அனைவரும் பொலிஸாரின் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட வேண்டிவரும். இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பிணை கோரும் எவரின் சிபாரிசும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலை பள்ளிவாசல்களில் அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சம்மாந்துறை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தெரிவித்ததாவது

தற்போது ஊரடங்கு சட்டம் எமது பிராந்தியத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால் இச்சட்டத்தை கடந்த 22 ஆம் திகதியில் இருந்து இளைஞர்கள் முதல் பாடசாலை மாணவர்கள் மீறி வருகின்றனர்.சிலர் எமது பாதுகாப்பு தரப்பினருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.கைதான பலரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்துள்ளோம்.எனினும் தற்போது ஊரடங்கு சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக பொலிஸ் பிணை கூட இனி வரும் தினங்களில்  கிடையாது.6 மாத காலம் தடுப்புக்காவலில் கைதானவர்களை வைத்திருக்குமாறு எமக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எமது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சம்மாந்துறை பகுதியில் வட்சப் கணக்கு ஒன்றினை பயன்படுத்தி பாதுகாப்பு தரப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்த நால்வரை கைது செய்துள்ளோம்.இவ்வாறு கைதானவர்கள் வட்சப் குழு ஒன்றினை உருவாக்கி அதனை வழிநடத்தியதுடன்  பாதுகாப்பு தரப்பினர்களின் நடமாட்டம் குறித்து ஏனைய குழு உறுப்பினர்களுக்கு தகவல்களை பகிர்ந்துள்ளனர்.இவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டனர்.ஊரடங்கு சட்டத்தை மீறியவர்கள் இதுவரை 27 பேர்  பொலிஸாரினால் கைதாகியுள்ளனர்.அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள்  துவிச்சக்கரவண்டிகள் வாகனங்கள் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என கூறினார்.

சவளக்கடை   பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி றம்சீன் பக்கீர் தனது கருத்தில்

ஊரடங்கு சட்டம் எமது பொலிஸ் பிரிவில் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் விவசாய நடவடிக்கை உள்ள பகுதி காரணமாக விவசாயிகள் வயல்களுக்கு சென்று வருகின்றனர்.அத்துடன் ஊரடங்கு சட்டத்தை எமது பிரிவில் சிறு தொகையினரே மீறியதுடன் ஐவர் இவ்வாறு கைதாகி எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர் என்றார்.

மத்தியமுகாம்  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.ஏ விஜயசிங்க

எமது பகுதியில் விவசாய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அத்துடன்  வர்த்தக நோக்கத்திற்காக மக்கள் பாஸ் நடைமுறை அனுமதியை கோரி நிற்கின்றனர்.இதற்காக பிரதேச செயலகம் உட்பட பலரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மட்டுப்படுத்த மட்டிலே அனுமதியை வழங்கி ஊரடங்கு சட்டத்தை முறையாக அமுல்படுத்தி வருகின்றோம்.எமது பகுதியில் சட்டத்தை மீறி நடந்து கொண்ட 8 பேர்  கைதாகி எச்சரிக்கை செய்த பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.ஆனால் இனிவரும் காலங்களில் கைதானவர்களுக்கு பொலிஸ் பிணை இல்லை என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.பெற்றோர்கள் ததததமது பிள்ளைகளை பாதுகாப்பாக வீடுகளிற்குள் வைத்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.

கல்முனை  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  கே.எச் சுஜீத் பிரியந்த

வர்த்தக நகரமாகவும் அடர்த்தியாகவும் 3 சமூகத்தை சேர்ந்த மக்கள் எமது பகுதியில் வசித்து வருகின்றனர்.அன்றாடம் இச்சட்டத்தை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மீறி வருகின்றனர்.தினமும் 3 தொடக்கம் 4 வீதம் கைதாகி சில மணித்தியாலங்கள் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டு அவர்களுக்கு அறிவுரையுடன் கூடிய எச்சரிக்கை வழங்கப்பட்ட பின்னர் விடுதலை செய்துள்ளோம்.ஆனால் அவர்கள் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில்  செலுத்தி சென்ற நிலையில்  நாம் கைப்பற்றிய வாகனங்கள் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.