மிருசுவில் படுகொலை சூத்திரதாரிக்கு எதிராக கே.வி. தவராசா முறைப்பாடு!

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டிருந்து இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், விடுதலை செய்யப்பட்ட இராணுவ அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.தவராசா தெரிவித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் சுனில் ரட்நாயக்க என்ற இராணுவ அதிகாரிக்கு 2015 ஆம் ஆண்டு தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையிலேயே, குறித்த இராணுவ அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.தவராசா தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்