கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றொருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்று மொத்தமாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 199 பேர் காண்காணிக்கப்பட்டு வரும் அதேவேளை, தற்போது வரையில் 101 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை