மன்னார் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 47 பேர் கைது!
மன்னாரில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 47 பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரையான காலப் பகுதியிலேயே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஊரடங்கு வேளையில் அநாவசியமாக வீதிகளில் நடமாடியவர்கள், வீதிகளில் கூடிநின்று கதைத்தவர்கள் என 47 பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை