பிரச்சினைகளை முன்வைப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்குத் தீர்வு வழங்கக்கூடிய ஒருங்கிணைப்பு ஒத்துழைப்புக்கான  பொறிமுறையொன்றை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அவசர நிலமையின் அடிப்படையில் செயற்படும்போது ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் கீழ் உடனடி நிவாரணம் வழங்குவதற்காக இந்தப் பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அன்றாட நடவடிக்கையைத் தங்குதடையின்றி முன்னெடுப்பதற்காகப் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்தில் ஏற்படக்கூடிய நடைமுறை சிரமங்களைத் தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவது இதன் நோக்கமாகும்.

இதனடிப்படையில், மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தேவையான ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்காக அமைச்சினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

* 0760 390 981
* 0760 390 437
* 0766 527 589
* 0760 390 732
* 0760 390 752

இந்தத் தொலைபேசி இலக்கங்களூடாக தமது பிரச்சினைகளை முன்வைக்குமாறு அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.