மண்முனை மேற்குப் பிரதேச சபையினால் மக்களுக்கு மரக்கறி வகைகள் விநியோகம்

கொரோணா தொற்று தொடர்பில் நாடு பூராகவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் அன்றாட வாழ்வியல் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இந்நிலையினைக் கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மண்முனை மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகரெத்தினம், பிரதித் தவிசாளர் பொ.செல்லத்துரை ஆகியோரின் வழிகாட்டலின் அடிப்படையில் மண்முனை மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேச மக்களின் நன்மை நிமித்தம் அவர்களுக்கான மரக்கறி வகைகள் விநியோகிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

உள்ளுர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளினை ஊக்குவிக்கும் செயற்பாடாகவும், ஊரடங்கி இருக்கும் மக்களுக்கான சேவைகளை வழங்கும் பொருட்டும் உள்ளுர் உற்பத்தி மரக்கறி வகைகள் கொள்வனவு செய்யப்பட்டு பிரதேச சபை ஊழியர்கள் மூலம் அதனை மக்களுக்கு விநியோகிக்கும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது பிரதேச சபைத் தவிசாளர் செ.சண்முகரெத்தினம், பிரதித் தவிசாளர் பொ.செல்லத்துரை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் இச்செயற்திட்டத்தில் பங்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.