கொரோனா வைரஸ் தொற்று காரணமாக லண்டனில் இலங்கையர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி லண்டனில் பெற்றுவந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு வாரகாலமாக சிகிச்சை பெற்றுவந்த பெல்தம் பகுதியை சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களில் சனிக்கிழமையன்று இங்கிலாந்தில் மட்டும் ஒரு நாளில் மேலும் 260 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது வெள்ளிக்கிழமை 759 ஆக இருந்தது என்றும் தற்போது 1,019 ஐ எட்டியுள்ளது என பிரித்தானிய அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போது 17,089 பேர் கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.