கொரோனா அச்சம் – மூன்று கிராமங்களுக்கு சீல்!

கொரோனா அச்சம் காரணமாக மூன்று கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

புத்தளம் கடையான் குளம் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களும், அக்குரணை பகுதியிலுள்ள ஒரு கிராமமும் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் 115 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.