கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் 2ஆவது இலங்கையர் உயிரிழப்பு

இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற இலங்கை வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 70 வயதுடைய ஹென்றி ஜயவர்தன என்பவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக லண்டனில் வசித்துவந்த 55 வயதான இலங்கையர் ஒருவர் பெல்தம் பகுதியில் நேற்று உயிரிழந்தார்.

மேலும் சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவந்த இலங்கையர் ஒருவர் கடந்த வாரத்தில் உயிரிழந்ததை அடுத்து, கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் முதலாவது இலங்கைப் பிரஜையின் மரணம் பதிவாகியது.

யாழ். புங்குடுதீவு பகுதியிலிருந்து சுவிஸிற்கு சென்ற 59 வயதான நபரே கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடு ஒன்றில் உயிரிழந்த முதலாவது இலங்கையர் ஆவார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் மரணமடைந்த ஓய்வுபெற்ற வைத்தியருடன் சேர்த்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3 ஆவது நபரின் மரணம் நிகழ்ந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.