பொலிஸ் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 45 பேர் மட்டக்களப்பில் கைது!
பொலிஸ் ஊரடங்கு சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 45 பேர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த ஊரடங்கு சட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பூரண ஆதரவு வழங்கிவரும் நிலையில் ஒரு சிலர் அவற்றினை மீறும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் காத்தான்குடியில் 19 பேரும், மட்டக்களப்பில் 10 பேரும், வாழைச்சேனையில் 15 பேரும், கொக்கட்டிச்சோலை பகுதியில் ஒருவருமாக 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வகையிலான நடவடிக்கைகளை மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுத்து வருகின்றது.
கருத்துக்களேதுமில்லை