கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு – சின்ன ஊறணி பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக  இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சின்ன ஊறணி , பாடசாலை வீதியைச் சோந்த 25 வயதுடைய துவேந்திரன் துசாந்தினி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் 3 மாத கர்ப்பிணி பெண்என பொலிஸார் கூறியுள்ளனர்.

கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை குறித்த இடத்திற்கு பொலிஸ் தடவியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருவதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.