கொரோனா அச்சுறுத்தல் – ஆயிரத்து 460 கைதிகளுக்கு பிணை!

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் ஆயிரத்து 460  சிறைக்கைதிகள் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ள கைதிகள் அனைவரும் ஏப்ரல் 03 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.