யாழ். நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி!
யாழ்ப்பாண நகரில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக்கப்பட்டது.
தற்பொழுது நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் மிகவும் இறுக்கமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யுத்த காலத்தில் களமிறங்கிய மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணியினர் மீண்டும் தற்பொழுது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக யாழ்ப்பாண நகரில் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை