சமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவொன்று வழங்கப்படும் – பிரதமர் அலுவலகம்!

சமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவொன்று வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அரச அலுவலர்களுக்கான வருடாந்த விழா முற்பணத்தை வழங்கவும், இருபத்தி மூன்று இலட்சம் சமூர்த்திக் குடும்பங்களுக்கு ஆரம்பக் கொடுப்பனவாக 5000 ரூபாவையும், அங்கவீனர் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளாத, காத்திருப்புப் பட்டியலில் உள்ள அங்கவீனர்களுக்கும் ஏற்புடைய கொடுப்பனவை வழங்கவும் ஜனாதிபதி மற்றும் பிரதம அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளது.

அத்துடன் ஓய்வூதிய, முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுவோருக்கு ஏற்புடைய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதியின் கீழ் ஓய்வுபெற்றோர் மற்றும் முதியோரின் வீடுகளுக்கே அனுப்பிவைக்கும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் 3ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கும் செயலணியின் பங்களிப்பு வழங்கப்படும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.