சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு உதவிய ஒருவர் கைது

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடத்திய பயங்கரவாதியை அழைத்துச் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை விரைவுபடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்திருந்த நிலையில் குறித்த நபர் கல்கிசை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்தியவருக்கு போக்குவரத்து உதவிகளை இவர் செய்ததாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.