பொதுத்தோ்தலை காலவரையறையின்றி ஒத்திவைக்க ஆணைக்குழு ஆலோசனை!

அரசமைப்பு ரீதியாக எழும் சிக்கல்களைத் தவிர்க்கும் நோக்குடன் நாடாளுமன்றத் தேர்தலை காலவரையறையின்றி ஒத்தவைப்பது குறித்து காபந்து அரசுடன் தோ்தல் ஆணைக்குழு ஆலோசனை நடத்தவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிலவும் சுகாதார நெருக்கடியால் நாடு முடங்கியுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனா். நாடாளுமன்றத் தோ்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூன் மாத தொடக்கத்தில் புதிய நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது போனால் அரசமைப்பு நெருக்கடிகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதுபோகும் என சட்டவல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

புதிய நாடாளுமன்றம் மே 14 கூடும் என ஜனாதிபதி வெளியிட்ட அதி விசேட வா்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடி போன்ற சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக மே 14 இற்குள் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது எனத் தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்நிலையி்ல் பொதுத் தோ்தலை மேலும் சில காலத்துக்கு ஒத்திவைக்க முடியும். எனினும், தொடா்ந்து நீண்ட காலத்துக்குத் தோ்தலை ஒத்திவைப்பதிலும் அரசமைப்பு ரீதியாக சில சிக்கல்கள் உள்ளன.

இது குறித்த விதந்துரைகள் அரசமைப்பின் 70 (5) (a) மற்றும் (c) பிரிவுகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்று அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க இரண்டு வழிகள் உள்ளதாக சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

ஒன்று அவசரகால சட்டங்களின் கீழ் நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசமைப்பில் திருத்தங்கள் செய்யப்படவேண்டும். இது முடியாது போனால் உயர்நீதிமன்றத்தின் தலையீட்டை நாட வேண்டும்.

நாட்டில் இதுபோன்ற சூழ்நிலையில் உயர்நீதிமன்றம் தலையீடு செய்ததற்கான எந்த முகாந்திரங்களும் இல்லை.

ஆனால் மற்ற நாடுகளில், தேர்தல்களை நடத்துவதையோ அல்லது புதிய நாடாளுமன்றத்தைக்  கூட்டுவதையோ தள்ளிவைக்க உயர்நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோருவதற்கு அவசியமான சரத்துக்கள் அரசமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் ஏப்ரல் 25 பொதுத்தோ்தல் திகதியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலைமை காரணமாக தேர்தல்கள் தாமதமாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.