வெளிநாட்டில் இருந்து வருகைதந்தவர்கள் தொடர்பான விபரங்களை திரட்டியது பொலிஸ்!

இம்மாதம் மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிக்கப்படுவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் தனிப்பட்ட தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை அறிவிப்பதற்கு விசேட அவசர இலக்கமாக 1933 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறினார்.

ஊரடங்குச்சட்ட கால கட்டத்தில் பயணிப்பதற்கு அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படுவது அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக மட்டுமே ஆகும் என சுட்டிக்காட்டிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணஇவ்வாறு வழங்கப்படும் ஊரடங்குச்சட்ட அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வரை செல்லுபடியாகும் என தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.