ஊரடங்கு அமுலில் கஞ்சா மதுபான போத்தல் கடத்திய இருவர் கைது-கல்முனையில் சம்பவம்
பொலீசார் வழங்கிய அனுமதி பத்திரத்தை (pass) பயன்படுத்தி போதைப்பொருள் உட்பட மதுபான வகைகளை கடத்தியவர்களை கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச் சுஜீத் பிரியந்த தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்மந்தமாக கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் நிகழ்வு கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர சபை கட்டிடமொன்றில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தனது கருத்தில்
ஊரடங்கு சட்டத்தை மதிக்கின்ற மக்களை நாம் வரவேற்றகின்றோம்.இவ்வாறான மக்களை மதித்து அவர்களுக்கு தேவையான அத்தியவசியப்பொருட்களை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு வியாபாரிகளுக்கு பொலிஸ் வழித்தட அனுமதியினை பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் நாம் வழங்கினோம்.
இவ்வாறு கைதானவர்களிடம் இருந்து 20 போத்தல் சாராயமும் 03 கேஸ் பியரும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களேதுமில்லை