யாழில் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் தொற்று நீக்கல் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி இன்று (திங்கட்கிமை) முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக, நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது.

சிறப்பு அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியினர், பொலிஸார் உள்ளிட்டோர் இந்தப் பணியை யாழில் முன்னெடுத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.