வேலையற்ற பட்டதாரிகளை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைக்க முடிவு!

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிரலயில் வேலையற்ற பட்டதாரி பயிற்சியாளர்களை கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில், வேலையற்ற பட்டதாரி பயிற்சியாளர்களை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைத்துக் கொள்ளல் மற்றும் சேவைக்கு சமூகமளித்தல் தொடர்பாக அரச நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பிலான ஏனைய அறிவித்தல்கள் வெகுவிரைவில் வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“தற்போது பிரதேச செயலாளர் அலுவலகங்களில் சேவைக்காக சமூகமளித்துள்ள பதிவுசெய்துள்ள பட்டதாரி பயிற்சியாளர்களில் பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பம் தற்போதைய நிலமையைக் கருத்திற்கொண்டு மே மாதம் வரையில் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவை அமைச்சின் கோரிக்கைக்கு அமைய கொரோனா வைரஸ் நோய்த் தொற்று நிலையை கட்டுப்படுத்துவதில் இவர்களின் ஒத்துழைப்புக்களை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குப் பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் இந்த காரியாலயங்களுக்கு தற்காலிகமாக இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.