ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் கைது

புத்தளம் ஆரச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்கறுப்பனைப் பகுதியில் நேற்று இரவு கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளதுடன், புத்தளம் மாவட்டத்தை  எச்சரிக்கை வலையங்களில் ஒன்றாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் அப் பகுதியில் இடம்பெற்ற மரண கிரியை ஒன்றில் 30 க்கும் அதிகமான நபர்களை இணைத்துக் கொண்டு கிரியை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து கடற்படையினர் எச்சரித்தபோதும் அதனை அவர் செவிசாய்க்காதமையினால் ஆரச்சிக்கட்டுவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.