ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மன்னாரில் சிறப்பு ஏற்பாடு!

மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், முன் ஆயத்தம் தொடர்பாகவும் அவசர கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வங்கி முகாமையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராயப்பட்டதோடு, மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் பிரதேச செயலாளர்கள் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் முக்கியமாக, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து வங்கி முகாமையாளர்களுடன் கலந்துரையாடப்பட்டிருந்தது.

குறிப்பாக எதிர்வரும் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் மன்னார் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுபவர்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்போடு அவர்களை ஏற்றி இறக்கும் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டது. அதற்கு அமைவாக பிரதேச செயலாளர்கள் ஊடாக ஓய்வூதியம் பெற்றுக்கொள்பவர்களின் புள்ளி விபரங்கள் கோரப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.