தமிழரசு மகளிர் அணியால் வலி.வடக்கு மக்களுக்கு இரவு உணவு!

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி சி.விமலேஸ்வரி ( இளைஞர் சேவைகள் ஓய்வுபெற்ற மாகாண பணிப்பாளர்) அவர்களின் நிதியுதவி ஊடாக வலிகாமம் வடக்கிலுள்ள கட்டுவன், குட்டியப்புலம், மாவை கலட்டி , மாவிட்டபுரம் தெற்கு , தெல்லிப்பழை துர்க்காபுரம் ஆகிய கிராமங்களில் இரவு உணவு வழங்கப்பட்டது.

இச்செயற்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் , வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சேனாதிராசா கலைஅமுதன் , இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி யாழ் மாவட்ட தலைவர் பிருந்தாபன், இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணி யாழ்.மாவட்ட உப தலைவர் க.குணாளன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் இணைப்பாளர் செ.பிரதாப், மகளிர் அணியைச் சேர்ந்த துஸ்யந்தி  ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்