வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரால் அளவெட்டி மக்களுக்கு உதவி!

வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் செ.விஜயராஜ் தனது சொந்த நிதியிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கிடைக்கப்பெற்ற நிதி உதவியிலும் தனது வட்டாரத்தில் பல்வேறு நிவாரணப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.

தற்போது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் சுயதொழில் மேற்கொள்கின்ற பல குடும்பங்கள் மிகவும் வறுமையில் வாடுகின்ற அசாதாரண நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களின் துயர் துடைப்பதற்காகத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் உறுப்பினர்கள், வாலிப முன்னணியினர், மகளிர் அணியினர் என பற்பல அணிகளாகப் பிரிந்து நாட்டின் சூழ்நிலையால் வறுமையில் வாடும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்