உயிரிழந்த இரண்டாவது நபரின் உடல் தகனம்…!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இரண்டாவது நபரின் உடல் நேற்று (திங்கட்கிழமை) பாதுகாப்புகளுக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டது.

சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள் பிரகாரம் நீர்கொழும்பு பொது மயானத்தில் குறித்த நபரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

அத்தோடு நீர்கொழும்பு வைத்தியசாலை வளாகமும் சுத்திகரிக்கப்பட்டது என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவந்த 64 வயதுடைய மற்றொரு நோயாளி உயிரிழந்தார். குறித்த நபர் ஒரு இருதய ரியலி என்றும் அவருக்கு நீண்டகால சுவாச பிரச்சினைகள் இருந்ததாகவும் நேற்று சுகாதார அமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்