ஐ.தே.க. – ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு நாளைவரை ஒத்திவைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே நேற்று நடைபெறவிருந்த கூட்டம் நாளை (புதன்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவில் அக்கட்சியின் உப தலைவர் ரவி கருணநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களானா ருவான் விஜேவர்தன, தயா கமகே, அர்ஜுன ரணதுங்க மற்றும் லக்ஷமன் விஜேமன்னே ஆகியோர் அடங்குகின்றனர்.

இந்நிலையில் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக குறித்த கூட்டத்தை நடத்த முடியவில்லை என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி மற்றும் பிரதமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.