வெளிநாடுகளில் இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை!

தெற்காசிய நாடுகளில் உள்ள இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட ஏனைய இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக அவர்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் பரவிவரும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் வரையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அந்தந்த நாடுகளிலேயே தங்குமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள தங்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவருமாறு இலங்கையர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவரும் நிலையிலேயே இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.