இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது கொரோனாவினை குணப்படுத்தும் மருந்து!

கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கான சிகிச்சைகளை வழங்கும் எவிகன் என்ற மருந்து வகை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இன்று(செவ்வாய்கிழமை) அவை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டு குறித்த மருந்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.

இதன்படி, முதற்கட்டமாக 5 ஆயிரம் மருந்துகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்