இணைய வசதியற்றோருக்கு தபால் திணைக்களத்தின் ஊடாக மருந்து விநியோகம்

இணையத்தள வசதி இல்லாத நபர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் ஊடாக மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரச மருத்துவமனைகளில் இருந்து மருந்துகளைப் பெறும் நோயாளிகளுக்கு தபால் திணைக்களத்தின் ஊடாக குறித்த மருந்துகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, நோயாளர்கள் அவர்களது பிரதேசங்களில் உள்ள அரச ஒசுசல ஊடாகவும் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.