மன்னார் பிரதேச சபைப் பிரிவு பகுதியில் தொற்று நீக்கும் நடவடிக்கை!

மன்னார் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் தொற்று நீக்கும் நடவடிக்கைகளை மன்னார் பிரதேச சபை முன்னெடுத்தது.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் பிரதேச சபையின் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்புடன் இன்று (செவ்வாய்க்கிழமை) தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வட்டார ரீதியாக குறித்த தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள மக்களுக்கு மன்னார் பிரதேச சபையின் தலைவர்  முஜாஹிர் தலைமையில் முகக்கவசம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் உள்ள மக்களின் நலனை கருத்திற்கொண்டு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.