சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் ஆழ்கடலில் கைப்பற்றப்பட்டன

தெற்கு கடலில் நடந்த விசேட நடவடிக்கை அடுத்து சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் ஆழ்கடலில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

500 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 500 கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப்பொருட்களே இவ்வாறு கடற்படையினரால் ஆழ் கடலில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தெற்கு கடலில் இருந்து 800 மைல் தொலைவில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை போதைப்பொருட்களைக் கொண்டு செல்லும் கப்பல்களை அடையாளம் காண செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்