கொழும்பு விசேட குழுவினால் சாவக்சேரியில் தொற்று நீக்கல் நடவடிக்கை!

கொரோனோ வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் யாழ். மாவட்டத்தின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை சாவகச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பிலிருந்து வந்தள்ள விசேட குழுவினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்து வருகின்ற இந்நடவடிக்கை யாழ்.நகரில் ஆரம்பித்து தொடர்ச்சியாக பல்வேறு இடங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது.

இன்று சாவகச்சேரிப் பகுதியின் பல இடங்களிலும் கிருமி தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கையை குறித்த குழுவினர் முன்னெடுத்தனர்.

குறிப்பாக சாவகச்சேரி பேருந்து நிலையம், பொதுச் சந்தை, ரயில் நிலையம், பிரதேச செயலகம், வங்கிகள் உள்ளிட்ட பல இடங்களில் கிருமி நீக்கி விசுறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதே போல தொடர்ந்தும் ஏனைய இடங்களிலும் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.