சனநடமாட்டம் குறைவு: வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அலுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் கிழக்கு மாகாணத்தில் இன்று (1) தளர்த்தப்பட்டதன் பின்னர் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள், வீதியோர வியாபாரங்கள் போன்றவைகளை திறப்பதற்கு பிரதேச சபை அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த தினங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது. ஆனால் இன்றைய தினம் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை போன்ற பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டன.
அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸார் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினர்.
பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை