சுவிஸ் மதப் போதகரினாலேயே மற்றைய போதகருக்கும் தொற்று

சுவிஸ் மதப் போதகரினாலேயே யாழில் இரண்டாவது நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவரும் போதகர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸிலிருந்து வந்த மத போதகர் பங்குகொண்ட வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் இருபது பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் பத்துப் பேருக்கு கொரோனா அறிகுறி இல்லாத போதிலும் கொரோனா தொற்றுத் தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது ஒன்பது பேருக்கு கொரோனா நோய்த் தாக்கம் இல்லை என்பது தெரியவந்துள்ளபோதிலும் மத போதகரான ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த மத போதகர் மானிப்பாயைச் சேர்ந்தவர் என்றும், அவர் கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றார் என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்.

சுவிஸ் மத போதகர் பங்குகொண்ட நிகழ்வில் பங்கெடுத்ததால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை எதிர்வரும் 06ஆம் திகதி விடுவிப்பதாக நேற்று பணிப்பாளர் தெரிவித்திருந்த நிலையில் அதில் காலதாமதம் ஏற்படலாம் என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.