ஓய்வூதியம் பெறுவோருக்காக திறக்கப்படுகின்றன மருந்தகங்கள்!

ஓய்வூதியம் பெறுவோருக்கான மருந்து கொள்வனவிற்காக மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளன.

இன்று(வியாழக்கிழமை), நாளை மற்றும் எதிர்வரும் 6ஆம் திகதிகளில் அனைத்து மருந்தகங்களும் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்றும், நாளையும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளை வங்கிகளுக்கு அழைத்துச்செல்வதற்கு வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்