பேருவளையில் 49 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை!

பேருவளை – பன்னில பகுதியில் 49 பேரை கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வலதர மற்றும் மொரகல்ல பகுதிகளுக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் H.T. ஜயனக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நோயாளியின் வீட்டுக்கருகில் வசிக்கும் நபர்களே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, குறித்த நோயாளியின் மனைவியின் வீடு அமைந்துள்ள பேருவளை பாரி ஹாஜியார் மாவத்தையில் அமைந்துள்ள வீட்டுக்கருகில் வசிப்பவர்களையும் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்